**என் ஆசிரியன்** – My Teacher…!
**என் ஆசிரியன்**
——————————-
*நான் பார்த்த ஆசிரியன்
வான் பார்த்து நின்றிருந்தான் …
வீணான சொற்களாலே
கூன்விழுந்து நொந்தானின்று…
*கணினி ஒன்றே போதுமென்று
எண்ணித்தான் கற்றாலும்-ஆசான்
இதயம் சொல்வதையென்றும்
இயந்திரம் சொன்னதில்லை…
*பசியுடனே கண்ணிரண்டும் அவன்
புசிக்க மறந்து தவிக்கும்போது…
கல்விப்பசியென்றெண்ணி
கல்வி புகட்டும் அவ்வியந்திரம்…
உன் பசியாற்றி கல்வி புகட்டும்
உன் ஆசான் இதயம்…
*ஆசான் வேண்டாமென்று
பாசாங்கு செய்திடினும்…
நாசாவில் உன் கால் பதியும் முன்
உன் இதயத்தில் பதியமிடும் உன் ஆசான் முகம்…
*இளம் தலைமுறைக்கென்று
புலமையதை தேடித்தேடி…
நாளும் தன்னைப் புதுப்பித்தே-உனதன்பால்
வீழும் ஓர் இதயம் உன் ஆசான்…
*தன் வீட்டு பிள்ளை மறந்து…
உன் நினைவை நாளும் சுமந்து…
உற்றுழி உதவும்-உன்
இன்னுமோர் பெற்றோர் ஆசான்…
*ஆசிரிய தினம் மட்டும்
ஆசானுக்கு மதிப்பளிக்காமல்…
ஆசிரியரை தினம் கொண்டாடி மதிப்பளிப்போம்.……
*இன்று நாம் ஆசிரியரென்றாலும்…
நேற்றைய நம் ஆசிரியரையும்
நூற்றாண்டு பல வாழ…
போற்றிடுவோம் இந்நன்னாளிலே.…
0 (Please login to give a Curious Clap to your friend.)
SignUp to Participate Now! Win Certifiates and Prizes.
Login/Signup